சோழவந்தான் :
மதுரை மாவட்டம் மேற்கு ஊராட்சி ஒன்றியம் சமயநல்லூர் ஊராட்சியில் கடந்த 5 ஆண்டுகள் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வளர்ச்சி பணிகள் செயல்படுத்திய போது தனக்கு முழு ஆதரவு வழங்கிய பொது மக்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் மலையாளம் சார்பில் நன்றி தெரிவிக்கும் கூட்டம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே நடைபெற்றது.
இதில் சமயநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவர் மலையாளத்தின் கடந்த ஐந்து ஆண்டு சேவைகள் குறித்து பேசினர்.
தொடர்ந்து பரவை பேரூராட்சி முன்னாள் தலைவர்கள் ராஜா மனோகரன் மற்றும் தொழிலதிபர் செல்ல பாண்டியன், நெடுஞ்செழிய பாண்டியன், டாக்டர் பாலமுருகன், கிராம பெரியவர்கள் அனைத்து கட்சி உறுப்பினர்கள்,சமூக ஆர்வலர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள், இளைஞர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் சுடச்சுட சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது