Close
ஜனவரி 9, 2025 7:05 மணி

ஒருநாள் சம்பளம் ரூ.48 கோடி ; ஆண்டுக்கு ரூ.17,500 கோடி..!

ஜக்தீப் சிங்

தனது ஒரு நாள் சம்பளமாக ரூ.48 கோடி பெற்று அசத்தும் இந்திய சி.இ.ஓ., ஜக்தீப் சிங்கின் ஆண்டு சம்பளம் ரூ. 17,500 கோடி.

உலகிலேயே அதிக ஊதியம் பெறும் ஊழியர் குவாண்டம்ஸ்கேப் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜக்தீப் சிங் என தெரிய வந்துள்ளது. வளர்ந்து வரும் வேலைவாய்ப்பு சந்தையில் ‘அதிக ஊதியம் பெறும் வேலை’ என்பதன் வரையறை, பாரம்பரிய பெருநிறுவனங்களின் நிர்வாகத் துறையினருக்கு அப்பால் விரிவடைந்து உள்ளது.

அந்த வகையில், ஜக்தீப் சிங் உலகின் அதிக ஊதியம் வாங்கும் ஊழியராக உருவெடுத்தார். அவரது ஆண்டு வருமானம், 17,000 கோடி ரூபாயாக உயர்ந்து, ஒரு நாளைக்கு சராசரியாக 48 கோடி ரூபாயாக உள்ளது.

தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பிலிருந்து கடந்தாண்டு தன்னை விடுவித்துக் கொண்ட சிங், தற்போது அந்நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவில் தொடர்கிறார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top