மதுரை.
மதுரை அண்ணா பஸ் நிலையத்தில் வாகனங்கள் நுழையும் பகுதியில் ஹோட்டல் வாசலில், அரசு சிட்டி பஸ் கட்டுப்பாடின்றி கார் மீது மோதி சேதம் ஏற்படுத்தியது.
மதுரையில் பெரும்பாலான நகரப்பேருந்துகள் பராமரிப்பு இல்லாமல் அங்கங்கு பழுதாகி நிற்பது, படிக்கட்டுகள் கழன்று விழுவது, மழைக்கு ஒழுகுவது என பல பிரச்னைகள் உள்ளன. அத்தனையும் பேருந்துகள் முறையாக பராமரிப்பு செய்யாமல் விடுவதால்தான் ஏற்படுகிறது.
இந்த நிலையில் இன்று பேருந்துகள் நுழையும் இடத்தில் நகரப்பேருந்து ஒன்று கட்டுப்படுத்த முடியாமல் கார்மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. இதில் காரின் முன்பகுதி சேதமானது.
மதுரை அரசுபோக்குவரத்துக் கழகமானது, அரசு பஸ்களை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.