Close
ஜனவரி 9, 2025 4:39 மணி

175 பஞ்சாயத்துக்களை சேர்ந்த இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள்: எம்.பி. வழங்கல்..!

நாமக்கல்லில் நடைபெற்ற விழாவில், கிராமப்புற இளைஞர்களுக்கு, விளையாட்டு உபகரணங்களை ராஜேஷ்குமார் எம்.பி. வழங்கினார். அருகில் கலெக்டர் உமா, மேயர் கலாநிதி ஆகியோர்.

நாமக்கல்:

இளைஞர்களின் விளையாட்டுத்திறன் மேம்படும் வகையில், 175 பஞ்சாயத்துகளில் உள்ள இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை ராஜேஷ்குமார் எம்.பி. வழங்கினார்.

கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்களின் விளையாட்டு திறன் மேம்படும் வகையில், நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம் சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட, 175 பஞ்சாயத்துகளுக்கு, விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா நாமக்கல்லில் நடைபெற்றது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். மேயர் கலாநிதி முன்னிலை வகித்தார்.

ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார் விளையாட்டு உபகரணங்களை வழங்கி பேசியதாவது:

தமிழக முதல்வர் ஸ்டாலின், கல்வியோடு விளையாட்டு துறையிலும் இளைஞர்கள் சாதனைபுரிய வேண்டும் என, இளைஞர் நலன் மற்றும் மேம்பாட்டு துறையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார். மேலும், தமிழக துணை முதல்வர் உதயநிதியின் சீரிய முயற்சியால், தமிழகம், பிற மாநிலங்களைக் காட்டிலும், விளையாட்டு துறையில் உலகளவில் பல்வேறு சாதனைகள் புரிந்து வருகிறது.

தமிழகத்தில், விளையாட்டு துறை என்பது நகரம் முதல் கிராமம் வரை எல்லா இடத்திலும் பறந்து விரிந்து இருக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, 6 சட்டசபை தொகுதிகளுக்குட்பட்ட, 322 பஞ்.,களுக்கு, விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட உள்ளது.

இதன் மூலம் தற்போதைய இண்டர்நெட் உலகில், மொபைல் போன் பயன்பாடு மற்றும் மன அழுத்தம் காரணமாக, இளைஞர்கள் உடல்நலன் மற்றும் மன நலன் பாதிப்படைப்பது குறைக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

துணை மேயர் பூபதி, முன்னாள் எம்.எல்.ஏ. ராமசுவாமி, டிஆர்டிஏ திட்ட இயக்குனர் வடிவேல், மகளிர் திட்ட இயக்குனர் செல்வராசு, சிஇஓ மகேஸ்வரி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் கோகிலா உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top