Close
ஜனவரி 9, 2025 5:48 மணி

கேரளாவில் ஐயப்பன் மண்டல பூஜை : தமிழக- கேரள எல்லையில் போக்குவரத்து நெரிசல்…!

சாலையில் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்.

தென்காசி மாவட்டம் தமிழக கேரளா எல்லைப் பகுதியான புளியரை வழியாக சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. அதே சூழ்நிலையில் தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு அதிகமான கனிம வள கனரக வாகனங்கள் செல்கின்றன.

தற்போது மண்டல பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் செய்ய ஏராளமான ஐயப்ப பக்தர்கள் இவ்வளியே பயணித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் இந்தப் பகுதி வழியாக ஐயப்ப சீசன் முடியும் வரை கனிம வள கனகர வாகனத்தை இயக்க வேண்டாம் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இலையில் இன்று தமிழக கேரள எல்லைப் பகுதியான புளியரை எஸ் வளைவு முதல் தாட்கோ நகர் வரை சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்யும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top