Close
ஜனவரி 9, 2025 6:01 மணி

ஈரோடு கிழக்கில் பொது வேட்பாளர்? அதிமுகவுக்காக காத்திருக்கும் பாஜக

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது. தமாகா சார்பில் பொது வேட்பாளரைக் களம் இறக்குவது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது.

பிப்ரவரி 5-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் இண்டியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும், திமுகவின் முன்னணி பிரமுகர்களும் தொகுதியை தங்கள் கட்சிக்கு ஒதுக்க சில முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவது குறித்து வரும் 11-ம் தேதி மாவட்ட செயலாளர்களைக் கூட்டி, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.

என்.டி.ஏ. கூட்டணி சார்பில் வேட்பாளரை நிறுத்துவது குறித்து, பாஜக தலைவர் அண்ணாமலை ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அடுத்த ஆண்டு நடக்கவுள்ள பொதுத் தேர்தலில், அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என பாஜக டெல்லி தலைமை தற்போது விரும்புகிறது. அதற்கு ஏற்ப, அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையின் சமீபத்திய செயல்பாடுகள் அமைந்துள்ளன.

அதிமுகவுடன் இணக்கமாகச் செல்ல, அண்ணாமலை தரப்பில் சிக்னல் கொடுக்கப்பட்டாலும், அதிமுக தரப்பில் இதுவரை அது ஏற்கப்படவில்லை.

இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை மையமாக வைத்து, என்.டி.ஏவில் அதிமுகவை இணைக்க முயற்சிகள் தொடங்கியுள்ளது. இதற்கான முதற்படியாக, ஈரோடு கிழக்கு தொகுதியில், இண்டியா கூட்டணி வேட்பாளரை எதிர்த்து, பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான முயற்சிகள் தொடங்கியுள்ளன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top