Close
ஜனவரி 10, 2025 1:46 காலை

இந்தியாவில் 300 கோடி டாலர் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்..!

மைக்ரோசாப்ட் சத்தியா நாதெள்ளா

இந்தியாவில் 300 கோடி டாலரை முதலீடு செய்யவுள்ளதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெள்ளா தெரிவித்துள்ளார்.

செய்யறிவு தொழில்நுட்பம் குறித்து மைக்ரோசாஃப்ட் சார்பில் பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், செய்யறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தில் இந்தியாவை முதன்மை நாடாக ஆக்க வேண்டும் என்பதே இந்த முதலீட்டின் நோக்கம் என்றும், தனிநபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் பயிற்சி அளித்து செய்யறிவு மூலம் கிடைக்கும் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் எனவும் கூறினார்.

செய்யறிவு தொழில்நுட்பத்தில் இந்தியா வேகமாக முன்னேறி வருவதாகவும், நாடு முழுவதும் புதிய வாய்ப்புகளை உருவாக்கி வருவதாகவும் குறிப்பிட்டார். மேலும், 2030ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் ஒரு கோடி பேருக்கு செய்யறிவு பயன்பாடு குறித்து பயிற்சி அளித்து அவர்களின் திறமையை மேம்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு அத்வாந்தா திட்டத்தை அறிமுகப்படுத்திய மைக்ரோசாஃப்ட் நிறுவனம், 2025ஆம் ஆண்டுக்குள் 20 லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்திருந்தது. அத்திட்டத்துடன் இணைந்து 2030க்குள் ஒரு கோடி பேருக்கு பயிற்சி அளிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இதுவரை 24 லட்சம் பேருக்கு செய்யறிவு தொழில்நுட்பம் குறித்து பயிற்சி அளித்துள்ளது. இதில், 65% பெண்கள், 74% ஆண்கள். செய்யறிவு தரவு மையங்களை இந்தியா முழுவதும் மைக்ரோசாஃப் நிறுவனம் பரவலாக்கி வருகிறது. இதுவரை உள்நாட்டு சந்தைக்காக 3 தரவு மையங்களை மைக்ரோசாஃப் நிறுவியுள்ளது. 2026க்குள் 4வது மையத்தை அமைக்க மைக்ரோசாஃப்ட் திட்டமிட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top