Close
ஜனவரி 10, 2025 1:39 காலை

தமிழ்ச் சங்கம் சார்பில் ஜன.12 –ல் ஆலங்குடி வெள்ளைச்சாமி கவிதை நூல் வெளியீட்டு விழா

புதுக்கோட்டை

புதுக்கோட்டை தமிழ்ச்சங்கம்

புதுக்கோட்டை தமிழ்ச்சங்கம் சார்பில் வரும் ஞாயிற்றுக்கிழமை ஆலங்குடி வெள்ளைச்சாமி யின் குலசாமியின் முத்தம் கவிதை நூல் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது

புதுக்கோட்டை அரியநாச்சியம்மன் கோயில் நகரத்தார் திருமண மண்டபத்தில்  ஞாயிற்றுக் கிழமை (12.1.2025) மாலை 6 மணியளவில் புதுக்கோட்டை தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கவிஞர் தங்கம்மூர்த்தி தலைமையில் நடைபெறுகிறது

விழாவுக்கு, ஸ்ரீபாரதி மகளிர் கல்விக் குழுமங்களின் தலைவர் குரு. தனசேகரன், பேராசிரியர் மு. பாலசுப்பிரமணியன், எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன முதுநிலை விஞ்ஞானி ஆர். ராஜ்குமார், தமுஎகச மாநில துணைத்தலைவர் கவிஞர் நா.முத்துநிலவன், ஊடகவியலாளர் கவிஞர் ராஜகம்பீரன், தமுஎகச மாவட்டத் தலைவர் கவிஞர் ராசி.பன்னீர்செல்வன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

புதுக்கோட்டை

குலசாமியின் முத்தம்…  கவிதை நூல் வெளியிட்டுச் சிறப்புரை முனைவர் பாரதி கிருஷ்ணகுமார்,  முதல் பிரதி பெறுபவர்- இளைய வள்ளல் பேக்கரி மஹராஜ் நிறுவனங்கள் அருண் சின்னப்பா, சிறப்பு பிரதிகள் பெறுவோர்-மூத்த மருத்துவர் எஸ். ராமதாஸ்,பேராசிரியர் சா.விஸ்வநாதன்,புலவர கும. திருப்பதி, கல்லாலங்குடி ஊராட்சி முன்னாள் தலைவர் த.பழனிச்சாமி, சென்னை ஜெயம் டிராவல்ஸ் என். சிதம்பரம்,  மாமன்ற உறுப்பினர்  சுப. செந்தில்குமார், தமுஎகச நிர்வாகி கவிஞர் சு. மதியழகன் ஆகியோர் பிரதிகளை பெறுகின்றனர். முன்னதாக கவிஞர் நேசன் மகதி வரவேற்புரையும் தமிழ்ச்சங்க துணைச்செயலர் சு. பீர்முகமது நன்றியுரையும் ஆற்றுகின்றனர். விழாவை, தமிழ்ச்சங்கச்செயலர் முனைவர் மகாசுந்தர் ஒருங்கிணைக்கிறார்,

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top