Close
ஏப்ரல் 19, 2025 1:05 மணி

விண்ணைத் தொட்ட கட்டணம்: விமானத்தில் அல்ல, ஆம்னி பேருந்துகளில் தான்

பொங்கல் விடுமுறைக்கு ஊருக்கு செல்பவர்களிடம் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக கடும் புகார் எழுந்துள்ளது.

சென்னையில் இருந்து நெல்லைக்கு  செல்ல ரூ. 4,000, மதுரைக்கு செல்ல ரூ. 3,800, கோவைக்கு செல்ல ரூ. 3,500 என கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

பொங்கல் பண்டிகை விடுமுறையொட்டி, சென்னையில் இருந்து வெளி மாவட்டங்களுக்குச் செல்லக்கூடிய ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பலமடங்கு உயர்ந்துள்ளது.

பொங்கல் பண்டிகை ஜன. 14 ஆம் தேதி முதல் கொண்டாடப்படவுள்ள நிலையில், ஜன. 19 வரை 6 நாள்கள் அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு ஜன. 11 சனிக்கிழமை முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்வோர் ஆயத்தமாகி வருகின்றனர். சென்னையில் இருந்து திருநெல்வேலி, நாகர்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு ரூ. 4,000 வரையிலும், மதுரைக்கு ரூ. 3,800 வரையிலும், கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு ரூ. 3,500 வரையிலும் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் இருந்து கோவை, மதுரைக்கு சாதாரண நாள்களில் விமானத்தில் சென்றால் கூட இதைவிட பயணச் செலவு குறைவு என்று சென்னைவாசிகள் அதிருப்தி தெரிவித்து வருகிறார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top