Close
ஜனவரி 10, 2025 6:18 மணி

தமிழ்நாடு இயற்கை உழவர் கூட்டியக்கம் உதயம்…

வானகம்

வானகம் நம்மாழ்வார் நினைவகத்தில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்றோர்

கடவூர் வானகம் பண்ணையில் நடைபெற்ற இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் ஆலோசனைக்கூட்டத்தில் தமிழ்நாடு இயற்கை உழவர் கூட்டியக்கம் என்ற அமைப்பு தொடங்கப்பட்டது.

தமிழ்நாட்டின் இயற்கை விவசாய அமைப்புகள் மூத்த முன்னோடிகள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம்  இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் விதைக்கப்பட்ட வானகத்தில் அண்மையில் (8.1.2025)   நடைபெற்றது.

இதில்,  “தமிழ்நாடு இயற்கை உழவர் கூட்டியக்கம்”  என்ற பெயரில் புதிய அமைப்பு உருவாக்குவதென தீர்மானிக்கப்பட்டது. மேலும் இந்த அமைப்பின் கொள்கை , இலக்கு , செயல் திட்டம் குறித்து  கலந்தாலோசித்து விதிமுறைகள் வரையறுக்கப்பட்டன.

இதனடிப்படையில் கூட்டியக்கத்தின் முதல் மாநில மாநாடு தமிழ்நாட்டின் அனைத்து இயற்கை விவசாயிகள் , இயற்கை விவசாய அமைப்புகள் , சூழல் ஆர்வலர்கள் பங்கேற்புடன் இயற்கை உழவர், உணவு பாதுகாப்பு மாநாடு ,  வரும்  பிப்ரவரி -15, 16  -ஆகிய தேதிகளில்  ஈரோடு சித்தோடு டெக்ஸ் வேலியில்  நடத்துவது.

அதன் செயல் திட்டங்களை மூத்த வேளாண் முன்னோடிகளின் வழிகாட்டலுடன் மாநாட்டு ஒருங்கிணைப்பு குழு தேர்ந்தெடுக்கப்பட்டு மாநாட்டு வேலை திட்டங்கள் வடிவமைக்கப்பட்டது.

தமிழ்நாடு இயற்கை உழவர், உணவு பாதுகாப்பு மாநாட்டு ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்களாக ,  இரா.வெற்றிமாறன்( 9566667708), ஐந்துணை வேலுசாமி (9842853068), நா. தெ. சிவகுமரன், ஹமாகிரன், வானகம் ரமேஷ், கார்த்திக் குணசேகரன், விஷ்ணு பிரியன், சிதம்பரம் சுரேஷ்குமார,   இரா. தயாநிதி, கௌரி, தாய்மண் பிரதீப்,வாசிம் ராஜா,கலசபாக்கம் ராஜன், இயல் கார்த்தி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

(பட விளக்கம்- கடவூர் வானகம் பண்ணையில் நடைபெற்ற இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்றோர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top