Close
ஜனவரி 15, 2025 12:54 மணி

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சமத்துவ பொங்கல் விழா..!

தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

தென்காசி மருத்துவமனையில் ஆண்டுதோறும் அனைத்து மருத்துவர்களும், பணியாளர்களும் இணைந்து சமத்துவ பொங்கல் விழா கொண்டாடுவது வழக்கம். கடந்த வருடம் தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை தமிழகத்தில் சுத்தம் சுகாதாரத்தை மேம்படுத்தும் காயகல்ப் குறியீட்டில் முதலிடம் பெற்று ரூபாய் 25 லட்சத்தை தட்டிச் சென்றது.

NQAS என்ற தேசிய தர குறியீட்டில் தேசிய தரச் சான்று பெற்றுள்ளது. கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற முஸ்கான் மற்றும் லக்ஷயா தேசிய தர குறியீட்டில் தேசிய அளவில் முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளது.

10 1 2025 அன்று நடந்த விழாவில் முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் அதிக பயனாளிகளுக்கு சிகிச்சை அளித்த மற்றும் அதிக அளவில் மருத்துவமனைக்கு வருமானம் ஈட்டி கொடுத்த வகையில், முதல் ஐந்து மருத்துவமனைகளில் ஒன்றாக தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்களால் கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

கடந்த சில வருடங்களாக மருத்துவத்துறையில் பல்வேறு சாதனைகளை புரிந்து வரும் தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு, மருத்துவமனை நிர்வாகம், மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களின் ஒற்றுமையும், கடமை உணர்ச்சியுமே காரணமாகும்.

இன்று நடந்த சமத்துவ பொங்கல் விழாவில் மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் குத்துவிளக்கேற்றி பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார்.
விழாவில் பணியாளர்களுக்கு பொங்கல் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.

விளையாட்டுப் போட்டியில் கண்காணிப்பாளர் மருத்துவர்கள் செவிலியர்கள் என அனைவரும் கலந்து பொங்கல் விழாவை சிறப்பித்தனர். போட்டிகளில் வெற்றி பெற்ற அனைவருக்கும் மருத்துவமனை கண்காணிப்பாளர் பரிசுகளை வழங்கினார்.சிறப்பு விருந்தினராக துணை இயக்குனர் மருத்துவர் கோவிந்த் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

சமத்துவ பொங்கல் விழாவில் கலந்து சிறப்பித்த அனைத்து மருத்துவர்கள், செவிலியர் கண்காணிப்பாளர்கள் ,செவிலியர்கள்,மருந்தாளுனர்கள் நுண்கதிர் வீச்சாளர்கள், ஆய்வக நுட்புணர்கள் ,மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

சமத்துவ பொங்கல் விழாவில் உறைவிட மருத்துவர் செல்வபாலா, குழந்தைகள் நல மருத்துவர் கீதா, அண்மையில் ஓய்வு பெற்ற மருத்துவர் லதா,சொர்ணலதா, மணிமாலா ,திருமலை குமார், ராஜலஷ்மி, மாரிமுத்து, முத்துக்குமாரசாமி ,நிர்மல், முத்துராமன் ,

செவிலிய கண்காணிப்பாளர்கள் பத்மாவதி, வசந்தி ,செவிலியர்கள் சீதா, தலைமை மருந்தாளுனர் ராமச்சந்திரன் ,கோமதி, சங்கரநாராயணன் ஜெயா, சுப்புலட்சுமி, தலைமை ஆய்வக நுட்புனர் ஹல்க், நுண்கதிர் வீச்சாளர்கள் மற்றும் பணியாளர்கள் என சுமார் 200 பேர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top