Close
ஜனவரி 15, 2025 9:51 காலை

அலங்காநல்லூர் பேருந்து நிலையத்தை அமைச்சர் கே.என் நேரு திறந்து வைத்தார்..!

சோழவந்தான் பேருந்து நிலையத்தை திறந்து வைத்த அமைச்சர் கே.என்.நேரு

சோழவந்தான் :

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் தேர்வுநிலை பேரூராட்சியில் மூலதன மானியத் திட்டம் (2022-23) கீழ் ரூ.ஒரு கோடியே 50 லட்சம் மதிப்பில் டாக்டர்.அம்பேத்கார் பேருந்து நிலைய மேம்பாட்டு பணிகள் மற்றும் வணிக வளாகத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு ரிப்பன் வெட்டி குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா, பேரூராட்சிகளின் இயக்குனர் கிரண் குராலா, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பின்னர் அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில்,

அலங்காநல்லூர் பேரூராட்சியில் ரூ.20 கோடிக்கும் மேற்பட்ட திட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் குறிப்பாக அலங்காநல்லூர் பேருந்து நிலையம், அறிவுசார் மையம், இணைப்பு மேம்பாலங்கள், பயணிகள் நிழற்குடை, தெருவிளக்கு, சாலை மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகள் மேம்படுத்தப்பட்டு நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் திமுக மாவட்ட அவைத்தலைவர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன், பாலராஜேந்திரன், பேரூராட்சி தலைவர்கள் ரேணுகாஈஸ்வரி கோவிந்தராஜ், பால்பாண்டியன், துணைத் தலைவர்கள் சுவாமிநாதன், கார்த்திக், நகர் செயலாளர்கள் ரகுபதி, மனோகரவேல் பாண்டியன் உள்ளிட்ட திமுக, காங்கிரஸ் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், பேரூராட்சி பணியாளர்கள், அரசு துறை அலுவலர்கள் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top