Close
ஜனவரி 15, 2025 9:31 காலை

பொங்கல் கரும்பு அறுவடை பணியில் விவசாயிகள் தீவிரம்..!

கரும்பு அறுவடைப்பணியில் ஈடுபட்டுள்ள விவசாய தொழிலாளர்கள்

உசிலம்பட்டி:

மதுரை, உசிலம்பட்டி பகுதியில் முதன் முறையாக பொங்கல் கரும்பு சாகுபடி செய்து அசத்திய விவசாயி . பொங்கல் திருநாளை முன்னிட்டு அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே கள்ளபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டி, விவசாயியான இவர், விவசாயத்தோடு உசிலம்பட்டி சந்தை பகுதியில் காய்கறி கடை நடத்தி வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் தை பொங்கல் திருநாளன்று கரும்பு வியாபாரம் செய்ய தேனி, கம்பம், மேலூர் பகுதிகளுக்கு சென்று பொங்கல் கரும்புகளை கொள்முதல் செய்து வந்து விற்பனை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், தனது விவசாய நிலத்திலும் பொங்கல் கரும்பை சாகுபடி செய்து பார்க்கலாம் என எண்ணிய விவசாயி, கடந்த ஆண்டு ஒன்றரை ஏக்கரில் பொங்கல் கரும்பு சாகுபடி செய்து பராமரித்து அறுவடை செய்த போது ஏக்கருக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமாக லாபம் கிடைத்தால் மகிழ்ச்சியடைந்துள்ளார்.

தொடர்ந்து, இந்த ஆண்டும் சாகுபடி செய்து தற்போது பொங்கல் திருநாளை முன்னிட்டு அறுவடை பணிகளில் தீவரமாக ஈடுபட்டு வருகிறார்.உசிலம்பட்டி பகுதியிலேயே முதன்முறையாக பொங்கல் கரும்பு சாகுபடி செய்து அறுவடைக்கு பின் இந்த ஆண்டும் ஏக்கருக்கு 1 லட்சத்திற்கும் அதிகமாக லாபம் கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.

தண்ணீர் பற்றாக்குறை காரணமாகவே, உசிலம்பட்டி பகுதியில் பொங்கல் கரும்பு சாகுபடி செய்வதில் விவசாயிகள் பெரிதும் ஆர்வம் காட்டுவதில்லை என்றும். தற்போது, 58 கால்வாய் நீரின் காரணமாகவும், தொடர் மழை காரணமாகவும் கண்மாய்கள் நிரம்பி காணப்படும் சூழலில் இனி வரும் காலத்தில் நல்ல லாபம் தரும் இந்த பொங்கல் கரும்பை சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டுவார்கள் என, வேளாண் அலுவலர்களும் தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top