Close
ஜனவரி 15, 2025 9:28 காலை

‘தை’ திருநாளையொட்டி பாலமேடு பகுதியில் கொத்து மஞ்சள் அறுவடை தீவிரம்..!

அறுவடை செய்யப்பட்டுள்ள கொத்து மஞ்சள்

சோழவந்தான்:

தை திருநாளை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் கொத்து மஞ்சள் அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மதுரை மாவட்டம், பாலமேடு அருகே அய்யூர் எர்ரம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கொத்துமஞ்சள் அதிக அளவில் பயிரிடப்பட்டு தற்போது அறுவடை நடைபெற்று வருகிறது.

இது குறித்து, கொத்து மஞ்சள் அறுவடை செய்யும் விவசாயிகள் கூறுகையில்:

தைத்திருநாளை முன்னிட்டு வருடம் தோறும் கொத்து மஞ்சள் நடவு செய்து மார்கழி 25ஆம் தேதிக்கு பிறகு அறுவடை நடைபெறும் தற்போது அறுவடை நடைபெற்று வருகிறது ஆடி மாசம் பயிரிடுவோம் ஒரு ஏக்கர் கொத்து மஞ்சள் பயிரிடுவதற்கு 45 ஆயிரம் செலவு செய்கிறோம் அறுவடை செய்த கொத்து மஞ்சள் ஏக்கர் ஒரு லட்சம் முதல் ஒன்னறை லட்சம் வரை விலை போகும் ஆகையால் ,இதில் நல்ல லாபம் உள்ளது

மதுரை மாவட்டத்தின் பல பகுதிகள் மற்றும் பாம்பே உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்கிறோம். மழை நேரங்களில் நோய் திரும்பத் தாக்கினால் மகசூல் குறையும் வாய்ப்பு உள்ளது. அப்போது எதிர்பார்க்கும் லாபம் கிடைக்காது. சென்ற ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு கொத்து மஞ்சள் மகசூல் குறைவாகவே உள்ளது.

பொங்கல் தொகுப்பில் கொத்து மஞ்சள் கொடுத்திருந்தால் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். கரும்புடன் சேர்த்து கொத்து மஞ்சள் கொடுத்திருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். ஒரு நேரம் மகசூல் அதிகம் கிடைக்கும். ஒரு நேரம் விளைச்சல் குறைவாக இருக்கும் நேரத்தில் நஷ்டம் ஏற்படும் பொங்கல் தொகுப்பில் கொத்துமஞ்சள் கொடுத்திருந்தால் நஷ்டத்தை சரி கட்டி இருப்போம்.

மாட்டுப் பொங்கலை முன்னிட்டு வீட்டில் பொங்கல் வைக்கும் அனைவரும் கொத்து மஞ்சள் இல்லாமல் பொங்கல் வைக்க மாட்டார்கள். ஆகையால், பொங்கலுக்கு கொத்துமஞ்சள் மிகவும் அவசியமாக தேவைப்படுகிறது. அதனால் அறுவடைப்பணியில் தீவிரமாக உள்ளோம். இவ்வாறு கூறினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top