சாலை விபத்தில் உயிரிழந்த அடைந்த தனிப்பிரிவு காவலரின் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவலராக பணிபுரிந்து வந்த செய்யது அலி கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு சாலை விபத்தில் சிக்கினார். இதனைத் தொடர்ந்து அவருக்கு சென்னை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அவரது உடல் சொந்த ஊரான தென்காசி மாவட்டம் தென்காசிக்கு கொண்டுவரப்பட்டது. ஆபத்து பள்ளிவாசல் தெருவில் அமைந்துள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் மரக்காயர் பள்ளிவாசலில் காவல்துறை சார்பில் 30 குண்டுகள் முழங்க அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. நிகழ்வில் ஏராளமான காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.