Close
ஜனவரி 23, 2025 5:26 மணி

தேர்தல் பிரசாரத்தில் AI பயன்பாடு வெளிப்படையாக இருக்கவேண்டும் : தேர்தல் ஆணையம்..!

தேர்தல் ஆணையம் -கோப்பு படம்

செயற்கை நுண்ணறிவவைப் பயன்படுத்தி தேர்தல் பிரசாரம் செய்தால் அதை வெளிப்படையாக குறிப்பிட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது :-

தேர்தல் நடைமுறைகள் மீதான நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் தவறான தகவல்கள் பரப்பப்படுவதை தடுப்பதற்கு அரசியல் கட்சிகள் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். மேலும், அனைத்து அரசியல் கட்சிகளும் பிரசாரத்தின் போது, கண்ணியம் மற்றும் நல்லொழுக்கத்தை பேணிக் காப்பற்ற வேண்டும்.

படங்கள், வீடியோ, ஆடியோ மற்றும் பிற பிரசாரங்கள் செய்யும்போது, அவற்றை செயற்கை நுண்ணறிவு (AI) பயன்படுத்தி உருவாக்கி இருந்தாலோ அல்லது திருத்தம் செய்திருந்தாலோ, அது பற்றிய குறிப்பை இடம்பெறச் செய்தல் அவசியம் ஆகும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (AI) தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்தப்படும்போது அது பொறுப்புடனும், வெளிப்படைத்தன்மையுடனும் பயன்படுத்தப்பட வேண்டும்.

இவ்வாறு தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top