Close
ஜனவரி 22, 2025 12:46 மணி

மீண்டும் கறவை மாடு பராமரிப்பு கடன் வழங்க விவசாய முன்னேற்ற கழகம் கோரிக்கை..!

பசு மாடுகள்-கோப்பு படம்

நாமக்கல்:

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில், விவசாயிகளுக்கு மீண்டும் கறவை மாடு பராமரிப்பு கடன் வழங்க வேண்டும் என விவசாய முன்னேறக் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து, விவசாய முன்னேற்ற கழக, மாநில பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன், நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஷ்குமார் எம்.பிக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும், விவசாயிகளுக்கு கால்நடை பராமரிப்பு கடன் 5 மாடுகளுக்கு ரூ. 90 ஆயிரம் வரை வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது திடீரென்று முறையாக கடனை திருப்பிச் செலுத்தியவர்களுக்கும், கால்நடை பராமரிப்பு கடன் வழங்க தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் மறுத்து வருகின்றனர். இதைப் பற்றி அவர்களிடம் கேட்டால், நாங்கள் மத்திய கூட்டுறவு வங்கியிடம் கடன் பெற்று தான் வழங்கினோம். தற்போது, அவர்கள் தர மறுக்கிறார்கள் என்கிறார்கள்.

இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கறவை மாட்டு கடனை முறையாக திருப்பி செலுத்தியவர்களுக்கும், புதிதாக கடன் தேவைப்படுபவர்களுக்கும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் கிடைப்பதில்லை. எனவே நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் என்ற முறையில், இதை உடனடியாக ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து, நாமக்கல் மாவட்டத்தில் கறவை மாடு வைத்திருப்பவர்களுக்கும் முறையாக கறவை மாடு பராமரிப்பு கடன் வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top