Close
ஜனவரி 22, 2025 4:04 மணி

பரந்தூர் பசுமை விமான நிலைய எதிர்ப்பு குழு பொதுமக்களை சந்திப்பதில் விஜய்க்கு சிக்கல்..!

பரந்தூர் பசுமை விமான நிலையத்தை பார்வையிட வந்த தவெக பொதுச் செயலர் புஸ்ஸி ஆனந்த்

காவல்துறை பாதுகாப்பு தருவதில் சிரமம் .!
தனியார் பண்ணை மண்டபத்தில் சந்திப்பதிலும் சிக்கல்..!

காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கி இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது..

இந்நிலையில் இந்த பசுமை விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 907வது நாளாக போராட்டக் குழுவினர் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் பிரபல திரைப்பட நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என கட்சி ஆரம்பித்து அதற்கான முதல் மாநாடு விக்கிரவாண்டி பகுதியில் நடைபெற்றது.

இம்மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட போதிலும் அதில் குறிப்பாக பரந்தூர் பசுமை விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் வரும் 19,20 ஆகிய தேதிகளில் அப்பகுதி பொதுமக்களை நேரில் சந்திக்க காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாநில பொருளாளர் உள்ளிட்ட நான்கு பேர் பாதுகாப்பு கோரி மனு அளித்தனர்.

இந்நிலையில் தற்போது ஏகனாபுரம் கிராமத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் பொதுவாக பொதுமக்களை சந்திக்கும் இடத்தில் இதற்கான முன்னேற்பாடு பணிகள் தற்போது துவங்கி நடைபெற்று வருகிறது.

தற்போது வரை காவல்துறை அனுமதி அளிக்காத நிலையில் அந்தப் பகுதியினை தமிழக வெற்றிக்கழக மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸிஆனந்த் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு பல்வேறு ஆலோசனைகள் நடத்தினர்.

காவல்துறை பாதுகாப்பு மற்றும் அனுமதி கிடைக்காத நிலையில் அதற்கு மாற்றாக அருகில் இருந்த தனியார் பண்ணை பகுதியில் திருமண மண்டபத்தையும் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்தப் பகுதி மிகுந்த பாதுகாப்பு அளிப்பதற்கு ஏற்ற வகையில் இருந்தாலும் அங்கு திருமண தேதிகள் உள்ளதால் அதில் அவர்களை சந்திக்க குறிப்பிட்ட தேதி கிடைக்காத நிலையில் ஏற்பட்டுள்ளது.

மேலும் மண்டபத்தை ஆய்வு செய்தபோது லயன்ஸ் கிளப் கூட்டம் நடத்த ஆய்வு செய்வதாக வந்ததாகவும் அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

அதன் பிறகு காவல்துறை மற்றும் திருமண மண்டப உரிமையாளர் அனைவரும் விஜய் கட்சிக்கான கூட்டம் நடத்த திட்டம் தீட்டப்பட்டதாக தெரிய வந்து தற்போது காலியில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

பொதுவாக திருமணம் மண்டபத்தினை கட்சி நிகழ்ச்சிகளுக்கு இவர்கள் தருவதில்லை என்பதும், இதனால் விஜய் அப்பகுதி மக்களை சந்திப்பதில் மிகுந்த சிக்கல் எழுந்து வருகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top