காரியாபட்டி:
காரியாபட்டி ஒன்றிய அதிமுக சார்பில், முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் பிறந்த தின விழா நடை பெற்றது. விழாவில், எம்.ஜி.ஆர் படத்திற்கு நிர்வாகிகள் தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
பின்னர் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், முன்னாள் எம்.எல்.ஏ.சிவசாமி, ஒன்றியச்செயலாளர் தோப்பூர் முருகன், மாவட்ட கழக அவைத் தலைவர் ஜெய பெருமாள், நகரச் செயலாளர் விஜயன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர திருச்செல்வம், மாணவர் அணி அமைப்பாளர். வேங்கைமார், வெயில் கண்ணன், சதீஸ், ராஜன், சுந்தர், ஆவியூர் குண்டு குமார் செல்வகுமார் , திருச்செல்வம், தோப்பூர் ரகு, ஆதி ஈஸ் வரன் உட்பட பலர் பங்கேற்றனர்.