Close
ஜனவரி 23, 2025 5:45 காலை

மாநில கிரிக்கெட் போட்டி : மேனகா மில்ஸ் முதலிடம்..!

தேனியில் நடந்த 14 வயதுக்கு உட்பட்டோருக்கான மாநில கிரிக்கெட் போட்டியில் முதலிடம் பெற்ற தேனி மேனகா மில்ஸ் அணிக்கு வெற்றிக் கோப்பை வழங்கப்பட்டது.

தேனியில் நடந்த 14 வயதுக்கு உட்பட்டோருக்கான மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் தேனி மேனகா மில்ஸ் கிரிக்கெட் பவுண்டேசன் முதலிடம் பெற்றது.

டி ஸ்கொயர் பவுண்டேசன் சார்பில் தேனி கொடுவிலார்பட்டியில் உள்ள ஆர்மி கிரிக்கெட் கிரவுண்டில் 14 வயதுக்கு உட்பட்டோருக்கான மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. பெங்களூர், சென்னை, கேரளா, மதுரை, தேனி பகுதிகளில் இருந்து மொத்தம் 8 அணிகள் பங்கேற்றன. மொத்தம் ஐந்து நாள் 15 போட்டிகள் நடைபெற்றன. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது.

தேசிய முன்னாள் ராணுவவீரர்கள் ஒருங்கிணைப்புக்குழுவின் தென்னிந்திய தலைவர் மகாராஜன், தேனி மாவட்ட தலைவர் மணி, முன்னாள் தலைவர் மணி, தேனி மாவட்ட ஸ்போர்ட்ஸ் டெவலப்மெண்ட் முக்கிய பிரமுகர் துர்க்கநாதன்,  லட்சுமிபுரம் எஸ்.பி.ஐ., வங்கி கிளை மேனேஜர் சுரேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

முதல் செமி பைனலில் மேன் ஆப் தி மேட்ச் ஆப் பர்ஸ்ட்க்கான யு.பிரனவ்ஆதித்யா, பிளேயர் ஆப் மேட்சுக்கான விருதினை மிகிளேஸ் பெற்றனர். செகண்ட் செமி பைனலில் மேன் ஆப் தி மேட்சினை தீபன் பெற்றார். அடுத்து நடந்த இறுதிப்போட்டிகளில் மேன் ஆப் தி மேட்ச் ஸ்ரீவத்சலன், பிளேயர் ஆப் பைனல் பிரனவ் சந்தோஷ்குமார் பெற்றனர்.

பெஸ்ட் பேட்ஸ்மேன் பரிசினை செழியன் (183 ரன்கள்), பெஸ்ட் பவுலர் பரிசினை (10 விக்கெட்) மணிகண்டன், பெஸ்ட் பீல்டர் ஆப் தி டோர்னமென்ட் பரிசினை ஸ்ரீதரன் (17 கேட்ச்),  பெஸ்ட் விக்கெட் கீப்பர் ஆப் தி டோர்னமென்ட் பரிசினை சுஜீத், எமர்ஜின் பிளேயர் ஆப் தி டோர்னமென்ட் பரிசினை கவுதம் சாட்ரோ, பிளேயர் ஆப் தி சீரியஸ் பரிசினை சுஜித் பெற்றனர்.

போட்டிகளில் 4வது இடத்தினை கிங் கிரிக்கெட் அகாடமி, 3வது இடம் ஆர்எம்சிசி, 2ம் இடம் நெக்ஸ்ட்வெவல் கிரிக்கெட் அகாடமி சென்னை, முதலிடத்தை தேனி மேனகா மில்ஸ் கிரிக்கெட் பவுண்டேசன் பெற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள் பரிசுகளை வழங்கி பாராட்டினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top