Close
ஜனவரி 22, 2025 7:57 மணி

தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு மழை தொடரும்…!

மழை -கோப்பு படம்

தமிழகத்தில் பல மாவட்டங்களில் நாளையும், நாளை மறுநாளும் மழை தொடரும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகள் ஒரு வளிமண்டல கிழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக இன்று அதாவது 19-01-2025ல் தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பொதுவாக காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி,ராமநாதபுரம் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை அதாவது 20-01-2025ல் தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை மறுநாள் அதாவது 21-01-2025ல் தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

22-01-2025 முதல் 24-01-2025 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று 19-01-2025ல் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில், லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஓட்டியும். குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top