Close
ஜனவரி 22, 2025 10:05 மணி

இந்திய பொருளாதார வளர்ச்சி : ஐ.எம்.எப்., வியப்பு..!

சர்வதேச நாணய நிதியம்-கோப்பு படம்

2025, 2026 ஆண்டுகளில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் IMF கணிப்பு வெளியிட்டுள்ளது.

உலகின் வேகமாக பொருளாதாரம் வளரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துள்ளது. கொரோனா காலத்திற்கு பின்னர் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அமெரிக்கா, சீனாவை விட அதிகமாகவே இருந்து வருகிறது.

உலக அளவில் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக உள்ள இந்தியா விரைவில் அதாவது 2027ம் ஆண்டுக்குள் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும் என கணிப்புகள் தெரிவிக்கின்றன. இது உண்மை தான் என ஐஎம்எப்பும் கணித்துள்ளது.

2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் என்று அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சர்வதேச நாணய நிதியமும் (IMF) கணித்துள்ளது.

உலக பொருளாதாரம் குறித்த தனது கணிப்பை அறிக்கையாக கடந்த ஆண்டு அக்டோபரில் வெளியிட்ட ஐஎம்எஃப், அதன் தொடர்ச்சியாக தனது புதிய அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது.

அதில், கடந்த அக்டோபர் மாதத்தில் கணிக்கப்பட்டபடி இந்தியாவில், 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. இது இந்தியாவின் முந்தைய ஆண்டுகளை விட அதிகம். மற்றும் உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளை விட இந்தியாவின் வளர்ச்சி அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top