Close
ஜனவரி 22, 2025 11:00 காலை

நாளை வானில் வர்ணஜாலம் ஏழு கோள்களின் அணிவகுப்பு..!

நேர்கோட்டில் தெரியும் கோள்கள்

நாளை அதாவது ஜன. 21-ல் கண்கொள்ளா காட்சியாக வானில் ஒரே நேர்கோட்டில் ஏழு கோள்கள் அணிவகுக்க உள்ளன.

வானில் ஏழு கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் அணிவகுத்து வரும் அதிசயம் வானில் ஜனவரி 21ம் தேதி நிகழவிருக்கிறது. ஏழு கோள்கள் அவற்றின் சுற்றுப்பாதையில் ஒரே டிகிரிக்குள் வருவதால், அவற்றை நம்மால் காண முடியும் என்பதால் நாம் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் என்கிறார்கள் வானிலை ஆய்வாளர்கள்.

வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, நெப்டியூன், யுரேனஸ் மற்றும் புதன் ஆகிய கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் அணிவகுத்து நிற்கும் அதிசய நிகழ்வானது ஜனவரி 21 ஆம் தேதி நிகழவிருக்கிறது.

இது குறிப்பிடத்தக்க நிகழ்வாக இருப்பதற்குக் காரணம், இந்த கோள்கள் அனைத்தும் பூமியிலிருந்து வெகு தொலைவில் இருப்பது மட்டுமல்ல, அந்தக் கோள்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு தொலைவுகளில் சுற்றிக்கொண்டிருப்பதும் தான். இவ்வாறு ஏழு கோள்களும் ஒரே நேர்க்கோட்டில் அணிவகுத்து நின்று, இரவு நேரத்தில் வானத்தில் ஓர் அழகிய அரை வட்டத்தை உருவாக்கிக் காண்பவர்களின் நினைவில் நீங்கா ஒரு அனுபவமாக இடம்பிடிக்கவிருக்கிறது. இவை எல்லாம் ஒரே நாளில் நடக்கப் போவதில்லை.

2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3 ஆம் தேதி முதல் நிலவுக்கு மிக அருகே வெள்ளிக் கோளானது நிலைகொண்டிருக்கிறது. அதன் பிறகு, ஜனவரி 13 ஆம் தேதி பௌர்ணமி நாளிலிருந்து செவ்வாய் கோளானது நெருங்கி வந்துகொண்டிருக்கிறது.

இந்த நிலையில் தான், வெள்ளியும், சனிக் கோளும் இதுவரை இல்லாத வகையில் நெருக்கமாக வந்து கொண்டிருக்கின்றன. இவை ஜனவரி 18 ஆம் தேதி முதல் மிக அருகருகே நேர்க்கோட்டில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜன. 18 முதல், மாலை வேளைகளில், இவ்விரண்டு கோள்களும் ஒரே நேரத்தில் மக்களுக்கு தெரியும். பலரும் பார்த்து வருகின்றனர்.

எப்போது காணலாம்?

சூரியன் மறைந்து, முழுவதும் இருள் சூழ்ந்த பிறகு உள்ளூர் நேரப்படி இரவு 8.30 மணி முதல் பார்க்கலாம். ஆனால், வெள்ளி, சனி மற்றும் நெப்ட்யூன் கோள்கள் மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வருவதற்கு இரவு 11.30 மணி முதல் நள்ளிரவு ஆகலாம்.

அது அவரவர் இருக்கும் இடத்தைப் பொருத்தது. அதன் பிறகு மேலும் சில மணி நேரங்களில் செவ்வாய், வியாழன், யுரேனஸ் கோள்களும் இவற்றுடன் அணிவகுக்கும். சூரிய உதயத்துக்கு சில மணி நேரத்துக்கு முன்பு செவ்வாய் மறைந்து விடும். இவ்வாறு வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top