மதுரை,விஜயவாடா, போபால், அகர்தலா, உதய்பூர், சூரத் உள்ளிட்ட ஆறு விமான நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டு மூன்றாம் தர நிலையிலிருந்து, 2ம் தர நிலைக்கு முன்னேறுகிறது.
மதுரை:
அகில இந்திய அளவில் நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்ககளில் அதிகரித்துள்ள விமான சேவை, விமான பயணிகளின் வருகை போன்ற ஆய்வுகளின் அடிப்படையில் மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் விமான நிலையங்களை மேம்படுத்துவது வழக்கம்.
அந்த வகையில் மதுரை உள்பட ஆறு விமான நிலையங்கள் தரம் உயர்த்துப்பட உள்ளன. மதுரை விமான நிலையத்தின் தரத்தை ஏபிடி(விமான பயணிகளின் excise வரி) தரம் மூன்றிலிருந்து ஏபிடி தரம் இரண்டிற்கு தரம் உயர்த்தப்படுவதாக மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.