Close
ஜனவரி 22, 2025 3:58 மணி

சிறுவனின் பேச்சு உடனே உங்களை சந்திக்க வைத்தது : விஜய் உருக்கம்..!

பிரசார வாகனத்தில் இருந்து பேசிய விஜய்

சென்னையின் இரண்டாவது புதிய விமான நிலையமாக காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில்,ஏகனாபுரம் உள்ளிட்ட 13கிராமங்களை உள்ளடக்கி பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்கும் பணியை மத்திய மாநில அரசுகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது.இந்நிலையில் இத்திட்டத்தை எதிர்த்து ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து 908வது நாளாக பலதரப்பட்ட போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் அன்மையில் கட்சி தொடங்கிய நடிகர் விஜய்யின், தமிழக வெற்றிக் கழகத்​தின் முதல் மாநாட்​டில் பரந்​தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிட வேண்​டும் என்று தீர்மானமும் நிறைவேற்றப்பட்ட நிலையில் வேறு எந்தப் போராட்​டத்​தை​யும் தவெக மேற்​கொள்ள​வில்லை,

தங்களை சந்திக்க வரவில்லை என ஏகனாபுரம் கிராம மக்கள் ஆதங்கம் தெரி​வித்​திருந்த நிலையில் இன்றைய தினம் விஜய்,பரந்தூரில் பகுதியிலுள்ள தனியார் திருமண மண்டப வளாகத்தில் ஏகனாபுரம் கிராம மக்கள்,விவசாயிகள் மற்றும் போராட்டக் குழுவினரை நேரில் சந்தித்து அவர்களிடம் உரையாற்றினார்.

அப்போது தவெக தலைவர் விஜய் உரையாற்றி பேசுகையில்,

பரந்தூர் போராட்டம் பற்றி ராகுல் என்ற சிறுவன் பேசிய பேச்சு எனது மனதை மிகவும் பாதிக்க செய்தது,உடனே உங்களை பார்க்க வேண்டும் என நான் முடிவெடுத்தேன்,உங்க எல்லாரையும் பார்க்க வேண்டும்,உங்க கூட நிற்க வேண்டும் என எனக்கு தொன்றியது,உங்க கூட நான் என்றைக்கும் துணை நிற்பேன்,

ஒவ்வொரு வீட்டிற்கு ரொம்ப முக்கியமானவர்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் அதைபோல் தான் நம் நாட்டிற்கு மிகவும் முக்கியமானவர்கள் உங்கள மாதிரியான விவசாயிகள்.

ஆகையால் இந்த விவசாயிகளோட கால் அடி மண்னை நான் தொட்டு கும்பிட்டு கொள்கிறேன். 90சதவிகித விவசாய நிலங்கள்,நீர்நிலைகளை அழித்து இந்த பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் கொண்டு வர வேண்டுமா ??? என விஜய் கேள்வி எழுப்பினார். மேலும் ஹரித்தாப்பட்டி பகுதியில் டங்ஸ்டன் அமைக்கும் பணியில் தமிழ் அரசு எடுத்த அதே நிலைப்பாட்டினை தானே இந்த பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு இந்த அரசு எடுத்திருக்க வேண்டும் ???

எடுக்கனும், ஹரிதாப்பட்டி மக்கள் எப்படி நம்ம மக்களோ அதே போல் தான் இந்த பரந்தூர் மக்களும் நம்ம மக்கள்,அப்படி தானே ஒரு அரசாங்கம் யோசிக்க வேண்டும்,செய்ய வேண்டும்,ஆனால் செய்ய வில்லையே, ஏன் செய்ய வில்லை என்றால் இந்த விமான நிலையத்தை தாண்டி இந்த திட்டத்தில் அவர்களுக்கு ஏதோ லாபம் இருக்கிறது,அதை நம் மக்கள் தெளிவாக புரிந்து வைத்திருக்கிறார்கள்.

நமது ஆட்சியாளர்களுக்கு ஒரு சில கேள்விகள்,

நீங்க எதிர் கட்சியாக இருக்கும் போது எட்டி வழி சாலையை எதிர்த்தீர்கள்,அதே தானே இங்கையும், எதிர்க்கட்சியாக இருக்கும் போது விவசாயிகளுக்கு ஆதரவு,ஆளும்கட்சியாக இருக்கும் போது எதிர்ப்பா என விஜய் ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.எனக்கு புரியவில்லை,

உங்க நாடகத்தை எல்லாம் பார்த்துக்கொண்டு மக்கள் சும்மா இருக்க மாட்டார்கள்,நீங்க உங்களோட வசதியிற்காக அவங்களோட நிக்கமா இருக்குறதும்,நாடகம் ஆடுறதும்,நாட்கம் ஆடாமல் இருக்குறதும்,அது சரி நம்புகிற மாதிரியே நீங்க நாடகம் ஆடுவதில் தான் கில்லாடிகள் ஆச்சே…என தமிழக திமுக அரசை விஜய் கடிமையாக சாடினார்.

மேலும் அதை மீறியும் நம்ம விவசாயிகள் உங்களுக்கு எதிராக போராடினால் பிரச்சினை தான்,ஆகையால் இனிமேல் உங்க நாடகத்தை பார்த்துகொண்டு மக்கள் சும்மா இருக்க மாட்டார்கள்,

இந்த விமான நிலையம் அமைப்பதற்காக நீங்கள் ஆய்வு செய்த இடத்தை மத்திய மாநில அரசுகல் மறு ஆய்வு செய்ய வேண்டும்,விவசாய நிலங்கள் இல்லாத பாதிப்புகள் குறைவாக இருக்கும் இடத்தில் உங்களோட விமான நிலையத்தை கொண்டு வாருங்கள், வளர்ச்சி தான் மக்களை முன்னேற்றும்,

ஆனால் அந்த வளர்ச்சி என்ற பெயரில் நடக்கும் அழிவு மக்களை ரொம்பவே பாதிக்கும், இனி உங்க வீட்டு பிள்ளையாக நானும்,தவேக தோழர்களும் சட்டத்திற்கு உட்பட்டு எல்லா வழிகளிலும் உங்களோடு நான் உறுதியாக நிற்பேன்,

உங்களோடு ஏகனாபுரம் ஊருக்குள் உள்ளே வந்து அந்த திடலில் உங்களை பார்ப்பதற்கு எனக்கு அனுமதி கிடைக்கவில்லை,இங்கு தான் அனுமதி கொடுத்தார்கள்,நான் ஊருக்குள் வருவதற்கு எனக்கு ஏன் தடை என தெரியவில்லை,
நீங்க உறுதியாக இருங்க,நல்லதே நடக்கும்,வெற்றி நிச்சயம் என பேசினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top