Close
ஜனவரி 22, 2025 7:21 மணி

சங்கரா கல்லூரி வளாக நேர்முகத் தேர்வில் 14 மாணவர்கள் பணிக்கு தேர்வு..!

பணிக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது

காஞ்சிபுரம் ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் இறுதி ஆண்டு மாணவர்கள் பயன்பெறும் வகையில் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதில் ஒரு பகுதியாக ஜனவரி 3ஆம் தேதி ZF Rane Occupant Safety Systems, Chennai, என்ற நிறுவனம் தங்கள் நிறுவனத்திற்கு தேவையான நிர்வாகிகளை தேர்வு செய்வதற்காக நேர்முகத் தேர்வு நடத்தியது .

அதில் கல்லூரியை சேர்ந்த பி.பி.ஏ, பி காம் மற்றும் பிஎஸ்சி பயோ கெமிஸ்ட்ரி போன்ற துறையை சேர்ந்த 90-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கெடுத்தனர்.

பல்வேறு கட்டங்களாக நேர்முகத் தேர்வு நடைபெற்ற பின் அதன் முடிவாக 14 மாணவர்களை நிறுவனம் தேர்வு செய்தது. இதன் பணி நியமன ஆணையை கல்லூரி முதல்வர் முனைவர்.கலை. இராம.வெங்கடேசன் மாணவர்களுக்கு வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.

மேலும் ஆதித்யா ஃபோர்ஸ் என்ற நிறுவனம் 4 ஜனவரி அன்று நேர்முகத் தேர்வை நடத்தியது.அதில் பிபிஏ இறுதி ஆண்டை சேர்ந்த ஐந்து மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர் அவர்களுக்கான ஆணையும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்கள் பங்கெடுத்தனர்.

பணி கிடைத்த அனைவரும் கிராமப்புற முதல் பட்டதாரி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top