காஞ்சிபுரம் இணை ஆணையர் குமாரதுரை தலைமையில், திருக்கோயில் பணியாளர்களின் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆண்டுதோறும் திருக்கோயில் பணிபுரியும் ஊழியர்கள் குறைய தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் என கடந்த 2022 -23 சட்டமன்ற கூட்டத்தொடரில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார்.
அதன்படி மண்டல அளவிலான குறை தீர்ப்பு நாள் கூட்டம் தமிழக முழுவதும் நடைபெற்று வருகிறது.
அவ்வகையில் காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையர் குமாரதுரை தலைமையில் இன்று காஞ்சிபுரம் மண்டலத்தில் உள்ள திருக்கோயில்களில் பணி புரியும் ஊழியர்கள் தங்கள் குறைகளை நேரடியாக தெரிவிக்கலாம் என கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டு இன்று காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.
இதில் இணை ஆணையர் குமராதுரை அமேசான் திருக்கோயில் செயல் அலுவலர்கள் முன்னிலையில் திருக்கோயில் பணியாளர்களிடமிருந்து குறை தீர்க்கும் அணுக்களைப் பெற்று அதற்கான தீர்வுகளை நேரடியாக திருக்கோயில் பணியாளர்களுக்கு தெரிவித்தார்.
இக்குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் திருக்கோயில் பணியாளர்கள் நிரந்தர பணி, ஊதிய உயர்வு, வார விடுமுறை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களாக அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து இணை ஆணையர் குமாரதுரை திருக்கோயில் பணியாளரிடம் பேசுகையில், இந்து சமய அறநிலைத்துறை சார்பில் வழங்கப்படும் சீருடைகள் மற்றும் அடையாள அட்டைகளை அனைவரும் அணிந்து இருந்தால் மட்டுமே திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான உதவிகளை உங்களிடம் கேட்டுப் பெறுவார்கள் எனவும், அறநிலை துறை சட்ட விதிகளை முறையாக பின்பற்றி பணி புரிய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
மேலும் பணியாளர்களின் குறைகளுக்கான நிவர்த்திகளையும் மண்டல மேலாளர் ராஜாவிடம் தெரிவித்து அதற்கான நடவடிக்கைகளை செயல் அலுவலர்களுடன் இணைந்து மேற்கொள்ள அறிவுறுத்தினர்.
இக்கூட்டத்தில் செயல் அலுவலர்கள், ஆய்வர்ஙள், திருக்கோயில்களின் மேலாளர்கள், திருக்கோயில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்