Close
ஜனவரி 23, 2025 4:00 காலை

மதுரையில் மாணவர்களின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி..!

மாணவர்களின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

மதுரையில் 36 வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு போக்குவரத்து காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

மதுரை:

தமிழகத்தில் 36-வது தேசிய சாலை பாதுகாப்பு மாதம் கடைபிடிக்கப்படுவருவதை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மத்தியில் சாலை பாதுகாப்பு குறித்த

விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் துண்டறிக்கை வழங்குதல் மற்றும் மாணவ மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வு உரை நிகழ்த்தி உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக மதுரை யா.ஒத்தக்கடையில், 36 ஆவது சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, யா.ஒத்தக்கடை போக்குவரத்து காவல் நிலையத்தின் சார்பாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியில், யா.ஒத்தக்கடை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நரசிங்கம் சாலை முதல் ஒத்தக்கடை பேருந்து நிலையம் வரை சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணியாக சென்றனர்.

ஊமச்சிகுளம் உட்கோட்ட காவல்துணை கண்காணிப்பாளர் பாலசுந்தரம் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் சரவணகுமார் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர் . மேலும், மதுரை முதல் மேலூர் சாலைகளில் முறையாக தலைக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு ஒத்தக்கடை போக்குவரத்து காவல் ஆய்வாளர் கலையரசி, சிறப்பு சார்பு ஆய்வாளர் பாலு, ஒத்தக்கடை சார்பு ஆய்வாளர் வெங்கடேசன், ஊமச்சிகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மெகராஜ், உடற்கல்வி ஆசிரியர் தவப்புதல்வன் மற்றும் பசுமை படை ஆசிரியர் குமணன் ஆகியோர் பாராட்டி மரக்கன்றுகள் வழங்கினார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top