அலங்காநல்லூர்:
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அய்யப்ப சுவாமி கோவிலில் உலக நன்மைக்காக புஷ்பாஞ்சலி பூஜைகள் நடந்தது. இதில் மூலவர் சுவாமிக்கு 9 வகையான அபிஷேகங்களும், அலங்காரமும் மஹாதீபாராதனைகளும் நடந்தது.
48 வதுநாள் பூஜைகள், யாகம், பட்டர்களின் வேத மந்திர யாகம் நிறைவு பெற்றது. இதை தொடர்ந்து கோவில் கொடிமர சன்னதி முன்பாக மல்லிகை ரோஜா, சம்மங்கி,, துளசி, செவ்வந்தி உள்ளிட்ட 9 வகையான வண்ண மலர்களை கொண்டு அலங்கரிக்கப்பட்டு., பூஜைகள் நடந்தது.
மேலும் பதினெட்டு படிகள் இருப்பது போல் பூக்களால்அமைக்கப்பட்டு, சுவாமிக்கு தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பெண்கள் உள்பட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி சீனிவாசன் மற்றும் முருக அய்யப்ப பக்தர்கள் குழுவினர்கள் செய்திருந்தனர்.