நாமக்கல் :
நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஊராட்சி ஊராட்சி ஒன்றியப் பகுதியில் நடைபெற்று வரும் அரசு திட்டப்பணிகளை கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், லக்காபுரத்தில் ரூ.39.95 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள கிராம பஞ்சாயத்து ஆபீஸ் கட்டிடத்தை அவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், காரைக்குறிச்சியில் தமிழக அரசின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ. 82.60 லட்சம் மதிப்பீட்டில் டி.எஸ் ரோடு முதல் காரைக்குறிச்சி புதூர் வழியாக தாத்தையங்கார்பட்டி வரை
புதிய தார்சாலை அமைக்கப்பட்டு வருவதையும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் செயல்பட்டு வரும் நர்சரி பண்ணையில் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருவதையும் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, செட்டிபாளையம், லக்காபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தமிழக அரசின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டப்பட்டு வருவதை
பார்வையிட்ட கலெக்டர், அதன் பயனாளிகளிடம் கலந்துரையாடினார். முன்னதாக, நாமக்கல் -சேலம் தேசிய நெடுஞ்சாலையில், புதுச்சத்திரம் பை பாஸ் ரோடு மற்றும் சர்வீஸ் ரோடு சந்திப்பு பகுதியைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.