மதுரை:
மதுரை கோயில்களில் தேய்பிறை அஷ்டமி விழா நடைபெற்றது. இதையொட்டி, மதுரை யாணைக்குழாய் முத்துமாரியம்மன் ஆலயத்தில் உள்ள கால பைரவருக்கு, பக்தர்களுக்கு சிறப்பு அபிஷேகங்களை , மணி கண்டன் பட்டர் செய்திருந்தார்.
இதே போல மதுரை மேலமடை தாசில்தார் சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில் உள்ள கால பைரவருக்கு, அபிஷேக அர்ச்சணைகள் சேகர் பட்டர் செய்தார். மதுரை பாண்டி கோயில், ஜெ. ஜெ. நகர் வர சக்தி விநாயகர் ஆலயத்திலும் தேய்பிறை அஷ்டமி பூஜைகள் நடைபெற்றது.
மதுரை அருகே சோழவந்தான் பிரளயநாதர் சிவன் ஆலயத்தில் தேய்பிறை அஷ்டமி விழாவை ஒட்டி, கால பைரவர் சிறப்பு பூஜைகளை , பரசுராம பட்டர் செய்தார். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் இளமதி, கணக்கர் சி. பூபதி, எழுத்தர் வசந்த் மற்றும் ஆலயப் பணியாளர்கள் செய்திருந்தனர்.