Close
ஜனவரி 25, 2025 1:22 காலை

பாலமேடு பத்ரகாளியம்மன் பள்ளி ஆண்டு விழா : அதிக மதிப்பெண் பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசு..!

சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ , மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

அலங்காநல்லூர்:

மதுரை மாவட்டம், பாலமேடு இந்து நாடார்கள் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியின் 36வது ஆண்டு விழா, டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனார் கல்வி மாளிகை முன்பாக நடந்தது.

உறவின்முறை சங்க தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தலைவர் அருணாச்சலவேல் பாண்டியன், பள்ளி துணை தலைவர் சிவாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் ரதிப்பிரியா வரவேற்றார்.

இளைய கலைவாணர் மதுரை முத்து, சமூக சொற்பொழிவாளர் அன்னபாரதி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினர். பள்ளியின் செயலாளர் மயில்வாகணன் ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில் உறவின்முறை சங்க செயலாளர் சுரேஷ், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.

தொடர்ந்து மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட பல்வேறு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பள்ளி செயலாளர் மயில்வாகணன் நன்றி கூறினார். முன்னதாக அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கும் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top