Close
ஜனவரி 25, 2025 1:23 காலை

ஓட்டுநர் தினத்தில் ஓட்டுனர்களுக்கு கெளரவம்..! காஞ்சி போக்குவரத்து கழகம் வாழ்த்து..!

ஓட்டுநர் தினத்தை முன்னிட்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

ஓட்டுனர் தினத்தினையொட்டி காஞ்சிபுரம் போக்குவரத்து கழக பணிமனைகள் பணிபுரியும் ஓட்டுநர்களுக்கு சால்வை இனிப்புகள் மற்றும் பூ கொடுத்து வாழ்த்துக்கள் தெரிவித்து காஞ்சிபுரம் உட்கோட்ட நெடுஞ்சாலைத் துறை சார்பில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மற்றும் எஸ் பி சண்முகம் துவக்கி வைத்தனர்..

தமிழகத்தினை விபத்தில் மாநிலமாக மாற்றும் நோக்கில் தமிழக போக்குவரத்து துறை சார்பில் வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாதம் வருடம் தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அவ்வகையில் காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது.

மேலும் இன்று ஓட்டுநர்கள் தினம் கொண்டாடப்படும் நிலையில் காஞ்சிபுரம் போக்குவரத்து கழக பணிமனைகளில் பணிபுரியும் ஓட்டுநர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மற்றும் எஸ் பி சண்முகம் ஆகியோர் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற விழாவில் சால்வை அணிவித்து இனிப்புகள் மற்றும் கொடுத்து ஓட்டுனர் தின வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

மேலும் விபத்திலா நிலையை உருவாக்கும் வகையில் வரும் செயல்படுவோம் ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும் சாலை பாதுகாப்பு மாதத்தை ஒட்டி காஞ்சிபுரம் உட்கோட்ட நெடுஞ்சாலைத் துறை சார்பில் 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியும் தொடங்கி வைத்தனர்.

இப்பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக பச்சையப்பன் பள்ளியில் அடையும். மாணவர்கள் விபத்தில் பயணம் மேற்கொள்ளவும் சாலை விதிகளை கடைபிடிக்கவும் கூறி கோஷங்கள் எழுப்பியும் பதாகைகள் ஏந்தியும் ஊர்வலமாக சென்றனர்.

இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை முதன்மை மேலாளர் தட்சிணாமூர்த்தி, காஞ்சிபுரம் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் முரளிதரன், பொறியாளர் இளங்கோ உதவி செயற்பொறியாளர் விஜய், காவல்துறை துணை கண்காணிப்பாளர் சங்கர் கணேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top