Close
ஜனவரி 25, 2025 1:06 காலை

குடியரசு தினவிழாவையொட்டி தென்காசி ரயில்வே ஸ்டேஷனில் தீவிர சோதனை..!

ரயில் நிலையத்துக்கு வந்த வாகனங்கள் சோதனை செய்யப்பட்டன.

நாடு முழுவதும் வருகிற ஞாயிற்றுக்கிழமை குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், தென்காசி ரயில் நிலையத்தில் காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

நாடு முழுவதும் வருகிற 26-ஆம் தேதி குடியரசு தின விழா கொண்டாடபட இருப்பதால் முக்கிய ஆன்மீக தளங்கள், பேருந்து நிலையங்கள், தொடர்வண்டி நிலையங்கள் என பல்வேறு இடங்களில் காவல் துறையினர் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை இருப்புப் பாதை காவல்துறை இயக்குனர், திருச்சி இருப்பு பாதை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், திருநெல்வேலி இருப்பு பாதை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர், மற்றும் காவல்துறை அதிகாரிகளின் உத்தரவுப்படி,

தென்காசி ரயில் நிலையத்தில் ரயில் தண்டவாள பகுதிகளையும், ரயில் நிலையத்திற்கு வரும் மூன்று சக்கர, நான்கு சக்கர, இருசக்கர வாகனங்கள் மற்றும் பார்சல் அலுவலகத்தையும், பயணிகள் கொண்டு வரக்கூடிய பைகள் மற்றும் பொருட்களையும் தென்காசி இருப்புப் பாதை காவல் நிலைய சார்பு ஆய்வாளர்கள் தலைமையில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top