Close
ஜனவரி 25, 2025 1:01 காலை

காஞ்சிபுரம் மாவட்ட அறங்காவலர் குழு நிர்வாகிகள் பொறுப்பேற்பு..!

காஞ்சிபுரம் மாவட்ட அறங்காவலர் குழு நிர்வாகிகள் பொறுப்பெற்றுக்கொண்டனர்.

காஞ்சிபுரம் மாவட்ட அறங்காவலர் குழு தலைவராக வாலாஜாபாத்தை சேர்ந்த கே.தியாகராஜன் தலைமையிலான குழுவினர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு அறநிலையத்துறை உதவி ஆணையர் ஆர்.கார்த்திகேயன் பதவியேற்பு செய்து வைத்தார்.

காஞ்சிபுரம் மாவட்ட அறங்காவலர் குழுவின் தலைவராக வாலாஜாபாத்தை சேர்ந்த கே.தியாகராஜன் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் செயல்பட்டு வந்தனர்.இக்குழுவினரின் பதவிக்காலம் கடந்த 17.8.24 ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது.இதனையடுத்து அறநிலையத்துறை சார்பில் மீண்டும் மாவட்ட அறங்காவலர் குழுவிற்கான தேர்வு நடைபெற்றது.

இதில் தகுதியான நபர்களாக மீண்டும் கே.தியாகராஜன் தலைமையிலான குழுவினரே தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.இவர்களுக்கு காஞ்சிபுரம் சரக உதவி ஆணையர் ஆர்.கார்த்திகேயன் பதவியேற்பு செய்து வைத்தார்.

இந்நிகழ்வில் வல்லக்கோட்டை முருகன் கோயில் செயல் அலுவலர் செந்தில்குமார்,ஆய்வாளர் பிரீத்திகா,ஆதிகாமாட்சி அம்மன் கோயில் செயல் அலுவலர் ஜெ.ப.பூவழகி,சித்ரகுப்த சுவாமி கோயில் செயல் அலுவலர் அமுதா,கச்சபேசுவரர் கோயில் மேலாளர் சுரேஷ் உட்பட அறநிலையத்துறை அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டு புதிய அறங்காவலர் குழுவினருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்ததுடன் கோயில் பிரசாதங்களையும் வழங்கினார்கள்.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாத சுவாமி கோயில் தலைமை பூஜகர் கே.ஆர்.காமேசுவர குருக்கள் தலைமையில் அக்கோயில் பணியாளர்கள் சால்வை,மாலைகள் அணிவித்து கோயில் பிரசாதமும் வழங்கினார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top