Close
ஜனவரி 25, 2025 1:26 காலை

காஞ்சிபுரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் : 37 பேருக்கு பணி நியமன ஆணை..!

வேலைவாய்ப்பு முகாமில் பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 37 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.முகாமில் 21 தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான வேலைநாடுநர்களை தேர்வு செய்தனர்.

மொத்தம் 119 பேர் பங்கேற்றதில் 31 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பணி நியமன ஆணைகளை காஞ்சிபுரம் மாவட்ட இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் நிர்மலாதேவி வழங்கினார்.

முகாமில் நேர்காணலுக்காகவும் 73 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top