Close
பிப்ரவரி 1, 2025 1:01 காலை

காஞ்சிபுரத்தில் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு பேரணி..!

5வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் தாலுக்கா அலுவலகத்தில் இருந்து தேசிய வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் கொடியசைத்து துவக்கி வைத்தார்

15வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் தாலுக்கா அலுவலகத்தில் இருந்து தேசிய வாக்காளர் விழிப்புணர்வு பேரணி துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் கலந்து கொண்டு தேசிய வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இப்பேரணியில் ஏராளமான கல்லூரி மாணவ மாணவிகள் தங்களது கைகளில் “வாக்களிப்பது நமது ஜனநாயக கடமை”,

“என் வாக்கு என் உரிமை” போன்ற வாக்களிப்பதன் அவசியம் குறித்த பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்திக்கொண்டும்,கோஷங்களை எழுப்பியவாரும்,நகரின் முக்கிய வீதிகளில் சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இதனை தொடர்ந்து ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வு வாக்காளர் சிறப்பு முகாமில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்கள் மற்றும் வாக்காளர் விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் சார் ஆட்சியர் ஆஷிக் அலி, உள்பட அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top