Close
ஜனவரி 27, 2025 7:28 மணி

தேசிய பெண் குழந்தைகள் தின விழா..!

தேசிய பெண் குழந்தைகள் தினம்

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியத்தில் உள்ள இளநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா சார்பில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி தலைமையாசிரியர் பார்வதி தலைமையில் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா உதவி திட்ட மேலாளர் விஜயகுமார் முன்னிலையில் நடைபெற்றது. பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு உதவி பொது மேலாளர் மோகனவேல் பரிசுகள் வழங்கி கருத்துரை ஆற்றினார்.

இந்நிகழ்வின் கருப்பொருளாக “பிரகாசமான எதிர்காலத்திற்கான பெண்களை மேம்படுத்துதல்” என்ற தலைப்பில் நடத்தப்பட்டது.பெண் குழந்தைகளை காப்போம் கற்பிப்போம், பெண் குழந்தைகளின் உரிமைகள்,பாதுகாப்பு, கல்வி, ஆரோக்கியம்,பாலின சமத்துவம் ஆகியவற்றை உறுதி செய்தல், என்ற தலைப்புகளில் விழிப்புணர்வு, உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இந்நிகழ்வில் மொத்தம் 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்று விழிப்புணர்வு அடைந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top