Close
ஏப்ரல் 16, 2025 4:56 காலை

சோழவந்தான் பேரூராட்சியில் 76 வது குடியரசு தின விழா..!

சோழவந்தானில் நடந்த குடியரசு தினவிழா

சோழவந்தான்:

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் 76 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. பேரூராட்சி வளாகத்தில் உள்ள கொடி கம்பத்தில் பேரூராட்சி செயல் அலுவலர் செல்வகுமார் தேசிய கொடி ஏற்றி கொடி வணக்கம் செலுத்தினார்.

பேரூராட்சித் தலைவர் எஸ் எஸ் கே ஜெயராமன், துணைத்தலைவர் லதா கண்ணன், வார்டு கவுன்சிலர்கள், துப்புரவு ஆய்வாளர் சூரியகுமார், இளநிலை உதவியாளர்கள் கல்யாண சுந்தரம், கண்ணம்மா, துப்புரவு மேற்பார்வையாளர் ராமு, பணியாளர்கள் சோனை, பூவலிங்கம், அசோக், பாண்டி, தொழிலாளர் முன்னேற்ற சங்க செயலாளர் பாலசுப்பிரமணியன், அமைப்புச் செயலாளர் ஹபிப் முகமது மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் சோழவந்தான் உழவன் உணவகத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. உணவக வளாகத்தில் தேசிய கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி கொடி வணக்கம் செலுத்தப்பட்டது. இதில் உழவன் உணவகத் தலைவர் போது மணி செயலாளர் சேது முள்ளி பள்ளம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மார் நாட்டான் அழகு சுந்தரம் விக்னேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top