Close
ஜனவரி 31, 2025 7:50 காலை

மதுரையில் 76வது குடியரசு தின விழா : மாவட்ட ஆட்சியர் காவல்துறை அணிவகுப்பை ஏற்பு..!

குடியரசு தின விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய மாவட்ட ஆட்சியர் சங்கீதா

மதுரை:

மதுரை மாவட்டம்,மாநகர காவல்படையினர் பயிற்சி மைதானத்தில் நடைபெற்ற 76-வது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, தேசிய கொடியினை ஏற்றி வைத்து, காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

மதுரை மாநகர காவல் படையினர் பயிற்சி மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பாக , (26.01.2025) நடைபெற்ற 76-வது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா,
தேசிய கொடியினை ஏற்றி வைத்து, காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

மேலும், சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளை கௌரவிக்கும் விதமாக பொன்னாடை போர்த்தினார். மேலும், இவ்விழாவில் அரசு திட்டங்களின் கீழ் 42 பயனாளிகளுக்கு ரூ.3,43,82,929/- மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மேலும், காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய மாநகர காவல் பிரிவு சார்ந்த 133 காவலர்களுக்கும், மாவட்ட காவல் பிரிவு சார்ந்த 74 காவலர்களுக்கும் என மொத்தம் 207 காவலர்களுக்கு முதலமைச்சர் பதக்கங்களையும், மாவட்ட நிர்வாகம் சார்பாக 80 காவல் துறை அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும்,  சிறப்பாக பணியாற்றிய பல்வேறு அரசு துறைகளை சார்ந்த 314 அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, வழங்கினார்.

இவ்விழாவில், கிரசண்ட் மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சௌராஷ்ட்ர பெண்கள் மேல்நிலைப்பள்ளி (அனுப்பானடி), அரசு ஆதிதிராவிடர் நல நடுநிலைப் பள்ளி (செம்பியனேந்தல்), விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி (திருவேடகம்), அரசு கள்ளர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி (செக்காணூரணி),

டி.வி.எஸ். மேல்நிலைப் பள்ளி (லட்சுமிபுரம்), பாரதியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி (எழுமலை) ஆகிய 7 பள்ளிகளைச் சார்ந்த மொத்தம் 536 மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இவ்விழாவில், தென்மண்டல காவல்துறை தலைவர் பிரேம் ஆனந்த் சின்ஹா, மாநகர காவல் ஆணையர் முனைவர்.ஜெ.லோகநாதன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.கே.அரவிந்தன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) டாக்டர்.மோனிகா ராணா, மாவட்ட வருவாய் அலுவலர் ர.சக்திவேல், வருவாய் கோட்டாட்சியர் ர.த.ஷாலினி உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top