Close
பிப்ரவரி 28, 2025 11:22 மணி

சோழவந்தானில் காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியல் முறியடிப்பு..!

கைது செய்யப்பட காங்கிரஸ் கட்சியினர்

சோழவந்தான்:

மதுரை மாவட்டம், சோழவந்தான் ரயில் நிலையத்தில் மத்திய உள்துறை அமைச்சர் தமிழகம் வருகையை கண்டித்து, காங்கிரஸ் கட்சியினர் சுமார் நூற்றுக்கு மேற்பட்டோர் மாநில பொதுக்குழு உறுப்பினர் சோழவந்தான் மூர்த்தி தலைமையில் ரயில் மறியல் செய்ய முயற்சி செய்தனர்.

அப்போது, முன்கூட்டியே தகவல் அறிந்த சோழவந்தான் காவல் துறையினரும், சோழவந்தான் ரயில் நிலைய காவல் துறையினரும் சேர்ந்து ரயில் மறியல் செய்வதற்கு முன்பாகவே ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தவர்களை மூர்த்தி மற்றும் அபுதாகிர் ஆகியோரை மடக்கி கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top