வரும் பிப்ரவரி 8ம் தேதி தேனிக்கு வரும் தமிழ்நாடு பனை மர தொழிலாளர் வாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணனுக்கு சிறப்பான வரவேற்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தேனி மாவட்ட நாடார் பேரவை ஆலோசனை கூட்டம் தேனியில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஜெய்முருகேஷ், மாவட்ட பொருளாளர் கந்தன் முன்னிலை வகித்தனர். தேனி நகர தலைவர் பாலமுருகன் வரவேற்றார். தேனி ஒன்றிய செயலாளர் ரமேஷ், தேனி நகர செயலாளர் பரணிதீபன், நகர பொருளாளர் அருஞ்சுனை, துணைத்தலைவர் ரவிக்குமார், நகர துணை செயலாளர் ஹேமந்த்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் வரும் பிப்ரவரி 8ம் தேதி மாலை 5 மணிக்கு தேனியில் நடக்கும் நாடார் பேரவை மற்றும் சமத்துவ மக்கள் கழகம் இணைந்து நடத்தும் ஆலோசனை கூட்டத்திற்கு வருகை தரும், தமிழ்நாடு பனைமர தொழிலாளர் நலவாரிய தலைவரும், நாடார் பேரவை மற்றும் சமத்துவ மக்கள் கழகத்தின் நிறுவன தலைவருமான எர்ணாவூர் நாராயணனுக்கு சிறப்பான வரவேற்று வழங்க தீர்மானிக்கப்பட்டது. மாவட்டத்தின் எல்லையான காட்ரோட்டில் இருந்து தேனி வரை எர்ணாவூர் நராயணனை ஊர்வலமாக அழைத்து வரவும் முடிவு செய்யப்பட்டது. மாவட்ட துணை செயலாளர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.