சிறுவாபுரியில் கடும் போக்குவரத்து நெரிசல் நடைபாதை வியாபாரிகள் சாலையை ஆக்கிரமிப்பு. ஆக்கிரமிப்புகளை அகற்றி நடவடிக்கை எடுக்க பக்தர்கள், பொதுமக்கள் கோரிக்கை.
பொன்னேரி அடுத்த சிறுவாபுரியில் பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் எதிரே உள்ள சாலை ஆக்கிரமிப்பு செய்து கடைகள் நடத்துவதால் போக்குவரத்து நெரிசல் சாமி தரிசனம் செய்வதற்கு வரும் பக்தர்கள் அவதி. ஆக்கிரமிப்புகளை அகற்றி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள், பக்தர்கள் கோரிக்கை.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி, சோழவரம் ஒன்றியம், சின்னம்பேடு சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது இக்கோயிலுக்கு சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு,தமிழக மட்டுமல்லாமல் ஆந்திரா, புதுச்சேரி,உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
இக்கோயிலில் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை 6 வாரங்கள் நெய் தீபம் ஏற்றி வழிபட்டு செய்து வந்தால் வீடு கட்டுதல், நிலப் பிரச்சனை, திருமணத்தடை,குழந்தை பாக்கியம்,அரசியல் சம்பந்தமான கோரிக்கைகள் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
இந்நிலையில் 19 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ₹1.கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு அன்று கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்தை தொடர்ந்து சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வர தொடங்கி விட்டனர்.
செவ்வாய் கிழமை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் பக்தர்கள் வரும் கார், வேன்,ஜீப்,பேருந்து என வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இது மட்டுமல்லாமல் நாளுக்கு நாள் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் ராஜகோபுரம் முன்பு உள்ள சாலை இருபுறமும் பூ, மாலை அர்ச்சனை கடைக்காரர்கள் ஒரு பக்கம்,நடப்பாதை வியாபாரிகள் சாலையை முழுமையாக ஆக்கிரமித்து வியாபாரம் செய்து வருவதால் அவ்வழியாக செல்லும் வாகனங்களாலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் பக்தர்கள் பொதுமக்கள் மிகச் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
செவ்வாய்க்கிழமை நாட்களில் சாமி தரிசனம் செய்ய வரும் ஆயிர கணக்கான பக்தர்கள் சாலையில் கியூ வரிசையில் சுமார் ஒரு கிலோமீட்டர் அளவிற்கு பல மணி நேரம் காத்திருந்து கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கின்றனர். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கோவில் நிர்வாகத்தின் சார்பில் பலமுறை காவல்துறையிடமும், சட்டமன்ற உறுப்பினர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டு மனு அளித்ததால் அப்போது சற்று சாலையை ஆக்கமிப்பு செய்துள்ள வீடுகள்,கடைகள் அதிகாரிகள் அகற்றி நடவடிக்கை எடுத்தனர்.
ஆனால் மீண்டும் சில மாதங்களில் சாலை இருப்புறங்களை ஆக்கிரமிப்பு செய்து கடைகளை அமைத்திருப்பதால் சாலை மிகவும் குறுகிய அளவை காணப்படுகின்றது. இவ்வழியாக செல்லும் வாகனங்கள் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதிப்பட்டு வருவது தொடர்கதை ஆகியுள்ளது.
இந்தப் போக்குவரத்து நெரிசலை குறைக்க அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அதனை அகற்றி சாலை விரிவு படுத்தி போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், வியாபாரிகளுக்கு உரிய இடம் ஒதுக்கீடு செய்து அவர்களுக்கு நிரந்தர கடைகளை கட்டி தருவதால் அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமலும், ஆக்கிரமிப்புகளை நிரந்தரமாக தவிர்க்கப்படுவதோடு போக்குவரத்து நெரிச்சலை தவிர்க்கலாம்.
இந்த போக்குவரத்து நெரிசல் தவிர்ப்பதற்கு சமீபத்தில் சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு மாற்றுப்பாதை அமைப்பது தொடர்பாக நெடுஞ்சாலை துறை அமைச்சர்கள் எ.வ.வேலு, இந்து சமய அறநிலைத்துறை சேகர்பாபு, சிறுபான்மை நலத்துறை அமைச்சர் நாசர் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தனர்.
எனவே மாற்றுப் பாதை திட்டத்தை உடனடியாக தொடங்கி விரைவாக திட்டத்தை முடித்து இந்த போக்குவரத்து நெரிசலை பிரச்சனையை சரி செய்து தர வேண்டும் என பொதுமக்களும், கோயிலுக்கு வரும் பக்தர்களும் என பல்வேறு தரப்பு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.