சோழவந்தான்:
மதுரை வடக்கு மாவட்ட திமுக சார்பாக சோழவந்தான் சத்திரம் முன்பு மத்திய பட்ஜெட்டை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு சோழவந்தான் வெங்கடேசன் எம் எல் ஏ தலைமை தாங்கினார். பேரூராட்சி செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் வரவேற்றார். ஒன்றிய செயலாளர் பசும்பொன் மாறன் பால ராஜேந்திரன்,பேரூராட்சி தலைவர் எஸ் எஸ் கே ஜெயராமன், பால்பாண்டியன் தலைமை செயற்குழு உறுப்பினர் புதூர் சேகர், பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் சி பி ஆர் சரவணன், மாவட்ட பிரதிநிதி பேட்டை பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் மாணவரணி மாநில துணைச் செயலாளர் அதலைசெந்தில்குமார் சிறப்புரை ஆற்றினார். மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.