Close
பிப்ரவரி 22, 2025 9:40 மணி

விழுப்புரத்தில் எசலாம் கிராம மக்கள் சாலை மறியல்..!

சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே எசாலம் கிராமத்தில் சுடுகாடு ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் மாவட்டம்,விக்கிரவாண்டி வட்டம், எசாலம் கிராமத்தில் சுமார் 3,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர், இவர்கள் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவில் அரசு புறம்போக்கு இடம் இருந்ததாக தெரிகிறது, இதனை அதே பகுதியைச் சேர்ந்த தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து பயிர் செய்து வருவதாகவும்,

இந்த ஆக்கிரமிப்பை அப்புறப்படுத்த வலியுறுத்தி சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு பலமுறை மனு கொடுத்தும், புகார் தெரிவித்தும் இதுவரை ஆக்ரமிப்பைஅகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது,இதனை அடுத்து வாரந்தோறும் திங்கள்கிழமை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கும் மாவட்ட மக்கள் குறை கேட்புக் கூட்டத்தில் மனு கொடுக்க கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு வந்தனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, ஐந்து பேர் மட்டுமே மனு கொடுக்க செல்லுங்கள் என தெரிவித்தனர், இதனை ஏற்றுக் கொள்ள மக்கள் மறுத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர், இந்நிலையில் கிராம மக்கள் திடீரென சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர், இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க அனுப்பி வைத்தனர், இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்படுத்தியது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top