Close
பிப்ரவரி 23, 2025 5:40 மணி

அலங்காநல்லூர் கீழக்கரையில் ஜல்லிக்கட்டு : அமைச்சர் தொடங்கி வைத்தார்..!

ஜல்லிக்கட்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்ட வீரர்கள். அமைச்சர் மூர்த்தி உறுதிமொழி ஏற்கவைத்தார்.

மதுரை:

அலங்காநல்லுார் கீழக்கரை கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் தொடர்ந்து 2 நாட்கள் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்று வருகிறது.

வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி மூர்த்தி காலை 7:00 மணியளவில் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மாடுபிடி வீரர்கள் உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர். மதுரை கிழக்கு தொகுதிக்குட்பட்ட 900 காளைகள், 500 வீரர்கள் பங்கேற்கின்றனர்.

களத்தில் நின்று விளையாடும் காளையின் உரிமையாளருக்கும்,காளைகளை தழுவும் வீரர்களுக்கும் தங்ககாசு,சைக்கிள், மிக்ஸி உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட உள்ளன. மதுரை கிழக்கு தொகுதிக் கு உட்பட்ட, மேற்கு, வடக்கு, திருப்பாலை, ஆனையூர் பகுதி காளைகள் இன்று பங்கேற்கின்றன.

பொது மக்கள் கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானத்தில் கண்டு ரசிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top