மதுரை:
மதுரை மாவட்ட கோயில்களில் தைபூசத்தையொட்டி, முருகனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி, அழகர் கோவில் பழமுதிர் சோலை முருகன் கோயில், மதுரை ஆவின் சாத்தமங்கலம் பால விநாயகர் ஆலயம், மதுரை பாண்டி கோயில் ஜெ. ஜெ. நகர் வர சக்தி விநாயகர், மதுரை தாசில்தார் நகர் வரசித்தி விநாயகர், மதுரை அண்ணாநகர், வைகை காலனி வைகை விநாயகர், வைகை காலனி கிழக்கு சக்தி மாரியம்மன், மதுரை தாசில்தார் நகர் சௌபாக்கிய விநாயகர் ஆலயங்களில், பக்தர்களால், முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கரிக்கப்பட்டு, அர்ச்சணைகள், பிரசாதம் வழங்கப்பட்டது.
சௌபாக்கிய விநாயகர் கோவிலில், கோயில் நிர்வாகம் சார்பில், பிரசாதங்களை, கோயில் நிர்வாகிகள் வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகிகள் செய்தனர்.