Close
பிப்ரவரி 23, 2025 4:28 காலை

திரிசூலக்காளியம்மன் கோவிலில் தைப்பூச பால்குட ஊர்வலம்..!

பால்குட ஊர்வலம்

உத்திரமேரூர் அருகே திரிசூலக்காளியம்மன் கோவிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு நடைபெற்ற பால்குட ஊர்வலத்தில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் தலையில் பால்குடம் சுமந்து வந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனம் கிராமத்தில் அமைந்துள்ள திரிசூலகாளியம்மன் கோவிலில் தைப்பூச விழாவையொட்டி பால்குடம் ஊர்வலம் விழா விமரிசையாக நடைபெற்றது.

இதில் 100‌க்கும் மேற்பட்ட பெண்கள் தலையில் பால்குடம் சுமந்து கொண்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக திரிசூலக்காளியம்மன் கோவில் வந்து அடைத்து அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து வேண்டுதலை நிறைவேற்றினர்.

அதைத்தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றது.

தைப்பூச விழாவிற்கு வந்திருந்த பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

முன்னதாக, கோவிலில் கோ பூஜை, நவகலச வேள்வி பூஜை உள்ளிட்டவை நடந்தது. தைப்பூச விழா ஏற்பாட்டினை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top