Close
ஏப்ரல் 27, 2025 12:41 காலை

அருள்மிகு ஸ்ரீ வரம் தரும் ஆதிஜோதி முருகர் கோயில் தைப்பூச பால்குட விழா..!

பால்குட ஊர்வலம்

அலங்காநல்லூர் :

மதுரை மாவட்டம், பாலமேடு செம்பட்டி பூசாரி தோட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ நீலகண்ட நாயனார் ஸ்ரீ வரம் தரும் ஆதி ஜோதி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழாவை ஒட்டி முன்னதாக கணபதி யோகம் நடைபெற்றது.

அதனை தொடர்ந்துமாலை விநாயகர் சன்னதியில் இருந்து பால்குடம் காவடி எடுத்து ஊர்வலமாக வந்து அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சேலம் மாவட்டம் எடப்பாடி திருமூலர் மூலிகை அபிஷேக அறக்கட்டளை சார்பில் 108 தெய்வீக இயற்கை மூலிகை அபிஷேகம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு தீபாராதனை, அன்னதானம், மாவிளக்கு பூஜை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top