Close
பிப்ரவரி 23, 2025 3:36 மணி

இளையனார்வேலூர் – நெய்யாடுப்பாக்கம் இடையே உயர்மட்ட பாலம் கட்ட பூமி பூஜை : மக்கள் மகிழ்ச்சி..!

இளையனார்வேலூர் - நெய்யாடுப்பாக்கம் இடையே செய்யாற்றின் குறுக்கே 20 வருட கோரிக்கைக்கு இன்று விடியல் தரும் வகையில் புதிய உயர்மட்ட பாலம் அமைக்க பூமி பூஜையினை சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் துவக்கி வைத்தார்.

இளையனார்வேலூர் – நெய்யாடுப்பாக்கம் இடையே செய்யாற்றின் குறுக்கே 20 வருட கோரிக்கைக்கு இன்று விடியல் தரும் வகையில் புதிய உயர்மட்ட பாலம் அமைக்க பூமி பூஜையினை சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் துவக்கி வைத்தார்.

அப்பகுதியில் பயிலும் பள்ளி மாணவர்கள் இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் வரவேற்பு அளித்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டத்திற்கு உட்பட்டது இளையனார்வேலூர் கிராமம். கிராமத்துக்கு உட்பட்ட வள்ளிமேடு, சித்தாத்தூர் இளையனார்வேலூர், காவந்தண்டலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நெய்யாடுப்பாக்கம் அரசினர் மேல்நிலைப் பள்ளிக்கு ஆற்றைக் கடந்து சென்று கல்வி பயிலும் நிலை உள்ளது.

பருவ மழை காலங்களும் ஏற்படும் வெள்ளப்பெருக்கால் செய்யாற்றை கடக்க இயலாத நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயில்வதில் சிரமம் ஏற்படுகிறது. இது மட்டும் இல்லாமல் நெய்யாடுபாக்கம் பகுதியை சுற்றியுள்ள இளைஞர்கள் தங்கள் வேலை வாய்ப்புகளுக்காக ஒரகடம் ஸ்ரீபெரும்புதூர் தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் நிலையில் இரு கடினமாக இருப்பதாக கடந்த 20 ஆண்டுகளாக உயிர்மற்ற மேம்பாலம் கோரி மனு அளித்து வந்தனர்.

இந்நிலையில் திமுக அரசு பதவியேற்றதும், தமிழக முதல்வர் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் தங்கள் தொகுதியிலும் முக்கிய கோரிக்கை நீண்ட நாள் நிலுவையில் நிறைவேறாத உள்ளதை தெரிவிக்க கோரினார்.

அதன் அடிப்படையில் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர், இளையனார்வேலூர்- நெய்யாடுபாக்கம் இடையே செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்க கோரிக்கை வைத்தார்.

அதனை ஏற்று நெடுஞ்சாலை துறை சார்பில் ரூபாய் 19 கோடி மதிப்பீட்டில் 300 மீட்டர் நீளம் கொண்ட புதிய பாலம் அமைக்க ஆணை வெளியிட்டார்.

அவ்வகையில் இன்று உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் அதற்கான பணியை துவக்கி வைக்கும் வகையில் பூமி பூஜையில் கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

இப்பணி துவங்கியதால் இரண்டு கிராம மக்களும் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இந்நிகழ்வில் திமுக ஒன்றிய செயலாளர் குமார், நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் விஜய், மாவட்ட கவுன்சிலர் பாபு , ஊராட்சி மன்ற தலைவர்கள், பொன்மொழி சுபாஷ் கமலக்கண்ணன் மற்றும் திமுக நிர்வாகிகள் கிராம பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top